யாழில் சாதனையாளர்களை சந்தித்த அதிபர் ரணில்!!

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம்(07) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் சாதித்தவர்களை சந்தித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தரம் 05 புலமைப்பரிசில் Read More

Read more

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் இன்று காலை பதவியேற்கவுள்ளார்!!

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று(21/07/2022) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாலையில் தப்பிப்பதற்கும் காரணமான எதிர்ப்பாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளை முதலிகே நினைவு கூர்ந்தார்.   எவ்வாறாயினும், நாடாளுமன்ற சதிப்புரட்சியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 6.9 மில்லியன் ஆணை இழக்கப்பட்டது அதிபர் தப்பி ஓட வேண்டியிருந்தது. ஆனால், Read More

Read more

பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு கையெழுத்திட்ட கோட்டாபய!!

தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார் எனவும் அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் தெரியவந்துள்ளது. அரச தலைவரின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் கோட்டாபய  Read More

Read more

சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி….. அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட்து மின்சார விநியோகம்!!

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நள்ளிரவு முதல் தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் மின்சார சபை பொறியிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தனர். ‘நள்ளிரவு 12 மணி முதல் பணியில் இருந்து விலகுவோம். முடிந்தால் யாராவது பொறுப்பேற்று இந்த அமைப்பைச் Read More

Read more

அரச மற்றும் தனியார் ‘கூட்டுத் திட்டத்தை’ நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியால் விசேட உத்தரவு!!

உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பாக அரச தலைவர்மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்துள்ளார். உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் இறக்குமதி, விநியோகம், முறையான மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தேசிய உரக் கொள்கையொன்றை Read More

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா சபையில் “பச்லெட்டிடம்” சமர்ப்பிக்கப்பட்டது!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ‘யாஸ்மின் சூகா’ 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார். குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கோட்டாபயவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது விசாரணை அறிக்கை இதுவாகும். 18 முன்னாள் இராணுவ Read More

Read more

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்ககாரர்களை இணைக்க பிரதமர் முடிவு….. அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ!!

சிறிலங்கா நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் ‘கோட்டா கோ கம‘ ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரை இணைத்துகொள்ள பிரதமர் திட்டமிட்டுள்ளார் என புதிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தைத் தொடராலாம். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை Read More

Read more

‘கோட்டா கோ கம’விற்கு வந்த கடித்ததால் பரபரப்பு!!

கொழும்பு அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட களத்திற்கு இலங்கை தபால் திணைக்களத்தின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடித உறையில் முகவரியாக கோட்டா கோ கம, காலிமுகத் திடல் போராட்ட களம், கொழும்பு 1 என அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கடிதத்தை தபால்காரர் ஒருவர் எடுத்துச் சென்று அங்குள்ளவர்களிடம் வழங்கியுள்ளார். கோட்டா கோ கம போராட்ட களத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கிருந்து கடிதம் அனுப்பி Read More

Read more

நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும்….. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்அழைப்பு!!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தைிற்கான அழைப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மைய இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் Read More

Read more

பிறப்பிக்கப்பட்டது உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்!!

கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைப்படும் வகையில் காவல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேல் மாகாணம் முழுவதும் இந்த ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு Read More

Read more