8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் இன்று காலை பதவியேற்கவுள்ளார்!!

8 ஆவது நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று(21/07/2022) காலை பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, அவரது பதவியேற்பு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாலையில் தப்பிப்பதற்கும் காரணமான எதிர்ப்பாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளை முதலிகே நினைவு கூர்ந்தார்.   எவ்வாறாயினும், நாடாளுமன்ற சதிப்புரட்சியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 6.9 மில்லியன் ஆணை இழக்கப்பட்டது அதிபர் தப்பி ஓட வேண்டியிருந்தது. ஆனால், Read More

Read more

ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17.8 மில்லியன் பணம் தொடர்ப்பில்….. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் 17.8 மில்லியன் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மொத்தம் ரூ. 17,850,000 ரூபாவை கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். பணத்தை கண்டுபிடித்த குழுவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த காவல்துறை குழுவினர் பணத்தை சேகரித்துள்ளனர். பணத்தை மீளப்பெற்றது தொடர்பில் காவல்துறையினர் இன்று (11/07/2022) நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more