உலகக் கிண்ணப் போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை வீரருக்கு சத்திரசிகிச்சை!!
ரி 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு இன்று (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே இவ்வாறு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ரி 20 உலகக் கிண்ணப் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று காலை அவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற உள்ளது. Read More
Read more