சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது – 800+ தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொலை…. மதிமுக செயலாளர் வைகோ!!

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். மாகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா Read More

Read more

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்….. ஒதுக்கப்பட்டது பணம்!!

அதிபர் தேர்தலை இந்த வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதிபர் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையின்படி, பட்ஜெட்டில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   Read More

Read more

யாழில் சாதனையாளர்களை சந்தித்த அதிபர் ரணில்!!

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம்(07) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் சாதித்தவர்களை சந்தித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தரம் 05 புலமைப்பரிசில் Read More

Read more

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்….. சினோபெக்கின் விலைகள் வெளியீடு!!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) நிறுவனமும் தமது திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (01) முதல் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லீட்டருக்கு சினோபெக்கினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளாவன, 92 ரக பெட்ரோல்  – 363 ரூபாய் ஓட்டோ டீசல்         –  355 ரூபாய் 95 ரக பெட்ரோல்  –  464 ரூபாய் சூப்பர் டீசல்  Read More

Read more

திடீர் சுகவீனதிதால் மரணமடைந்த யாழ் பல்கலை மாணவி….. கண்ணீர் மல்க இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்த உறவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, சாயுடை  பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம்(25/12/2023) அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர், நண்பிகள் , ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை…. பதில் காவல்துறை மா அதிபர் அதிரடி அறிவிப்பு!!

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று (02/12/2023) பிற்பகல் சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் காவல்துறை மா அதிபர், “நாட்டில் அதிகளவில் வீதி விபத்துகள் நடக்கின்றமை பெரிய Read More

Read more

மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரிப்பு!!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் ஆகியோர் அந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன் Read More

Read more

ஆசிரியரின் மோசமான தாக்குதல்….. படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!

ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் குறித்த ஆசிரியர் தமது மகனான மாணவனை பலமுறை அடித்துள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

Read more

நாட்டில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும்!!

இலங்கையில் அடுத்த  ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read more

சிகிச்சைபெற வந்த 29 வயது பெண்ணை வன்புணர்வு செய்த மருத்துவர்!!

தான்நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் மருத்துவர் கைது Read More

Read more