தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை. அந்தவகையில், இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Read More

Read more

இலங்கை கிரிக்கெட் அணி இடை நீக்கம்….. ICCஅதிரடி!!

இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Read more

நாளை முதல் ‘அஸ்வசும வாரம்’ ஆரம்பம்!!

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்துக்கான விண்ணப்பங்கள் கோரும் பணி வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என சமூக நலப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், முதற்கட்ட கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அதன் நிர்வாக சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்வசும விசேட வாரம் நாளை (06/11/2023) ஆரம்பமாகவுள்ளதாகவும் அந்த வாரத்தில் Read More

Read more

மாகாண மட்டத்தில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்….. கால அட்டவணை வெளியிட்டார் அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர்!!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(01/11/2023) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார். அத்தோடு, 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை(02/11/2023) ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02/11/2023) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். Read More

Read more

மீண்டும் ஆரம்பமானது காரைநகர் யாழ்(785/1) பேருந்து சேவை!!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் 785/1 பேருந்து சேவை இன்று(01/11/2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும். கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர் – மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக இந்த பேருந்து Read More

Read more

தேசிய அடையாள அட்டை வழங்கும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை!!

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, “தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2000 ரூபாவாக இருக்க வேண்டும். அ‌த்துட‌ன், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் ஜெனரலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ Read More

Read more

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை….. முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27/10/2023) வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று(26/10/2023) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(27/10/2023) வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

Read more

மீண்டும் எரிபொருளுக்கு கியு ஆர் முறை…!

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில் எனவும் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற Read More

Read more

Sri lankan Airlines தாமதம்….. இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அண்மைய தாமதத்தினால் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக எட்டு விமானங்கள் தாமதமாக வந்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். சிறி லங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளைப் Read More

Read more

மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை!!

விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read more