Sri lankan Airlines தாமதம்….. இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!!

சிறி லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அண்மைய தாமதத்தினால் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக எட்டு விமானங்கள் தாமதமாக வந்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார். சிறி லங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளைப் Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. அதன்பின், இந்தியாவின் சென்னை Read More

Read more

கடந்த வருட முதல் நான்கு மாதங்களில் மட்டும்….. 55 அரச நிறுவனங்களில் 86,000 கோடி ரூபா நட்டம் – 150600 கோடி ரூபா கடன்!!

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்(Sri lanakn Airelines), பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(Petroleum Corporation), இலங்கை மின்சார சபை(Electricity Board of  Sri Lanka) உள்ளிட்ட 55 அரச நிறுவனங்கள் கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 86,000 கோடி ரூபா நட்டம் எதிர்கொண்டுள்ள. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இது முந்தைய ஆண்டில் Read More

Read more

நாட்டில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இன்னொரு விமான நிலையம்!!

இரத்மலானை விமான நிலையம் இம்மாதம் 29ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(DV Chanaka)தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். தென்னிந்தியா மற்றும் மாலைதீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்றார். இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் பல சர்வதேச Read More

Read more

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்ட நிலை – நிறுத்தப்படுமா சேவைகள்?

எரிபொருளுக்கான டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சவுதி அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் சவுதி அரசாங்கத்திடம் உதவி கோருவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். குறுகிய கால அல்லது நீண்ட கால கடன் வசதி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கடன் தொகை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். Read More

Read more

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லத் தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு, Read More

Read more

பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more

நவம்பர் 4 முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவை வழங்கும் ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம்!!

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இலங்கைக்கான நேரடி விமான சேவையை வெளிநாடொன்றின் விமான நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி ரஷ்யாவின் எரோபுளொட் (Aeroflot) என்ற விமான சேவை நிறுவனமே எதிர்வரும் நவம்பர் 4 ஆம்திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ரஷ்யாவின் ஏரோபுளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Read More

Read more