இரு வருடத்திற்கு மாத்திரம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டது….. டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானம்!!

இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்று(Tonier-228 maritime surveillance aircraft) பதிலீடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின்(Tonier-228 maritime surveillance aircraft) வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்கான இன்று (16/08/2023) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் Read More

Read more

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை….. வெளிநாட்டவர்களுக்கும் வாய்ப்பு!!

பொதுமக்கள் தங்களுக்கு உரிய பிரதேச செயலகங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50 பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 55 நிறுவனங்களில் இணையவழியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து, உரிய பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை வழங்கி, மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இணையவழியில் Read More

Read more

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லத் தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு, Read More

Read more

பாரிஸ் இற்கு இனி நேரடி விமான சேவையை முன்னெடுக்கவுள்ள Sri lankan Airlines!!

சிறிலங்கன் விமான சேவை பிரான்ஸின் பாரிஸ் தலைநகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, 297 இருக்கைகளுடன் கூடிய ஏயார் பஸ் ஏ330-300 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து புதன் , வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரான்ஸுக்கான விமான ​சேவை இடம்பெறும் என சிறிலங்கன் விமான சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more