யாழ்ப்பாணத்தில் வீதிகளை மேவிப்பாயும் வெள்ளம் : போதுக்குவரத்து தடைப்பட்டது

தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக கொட்டித்தீர்க்கும் மழையால் யாழ்ப்பாணத்தில்(jaffna) பல வீதிகளை மேவி வெள்ளம் பாய்ந்த வண்ணமுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக செம்மணி – நல்லூர்(nallur) வீதி நீரில் மூழ்கியுள்ளது. குறித்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட வேண்டாம் என வாகன சாரதிகளை யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் சமிலி பலிகண்ன தெரிவித்தார். சீரற்ற வானிலை, தொடர் கனமழையால் நல்லூர் பகுதி வெள்ளக்காடானது. Read More

Read more

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி – யாழில் இருந்து கொழும்பு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது இதன்படி, ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடான வீதிகளை சாரதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை Read More

Read more

எரிவாயு பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – லாஃப்ஸ் நிறுவனம்

எரிவாயு பற்றாக்குறைக்கு எதிர்வரும் சில தினங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என லாஃப்ஸ்  நிறுவனத்தின் தலைவர் W.K.H.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில்(25) 2 எரிவாயு கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக அவர் கூறினார். அதற்கமைய, இன்று(26) முதல் குறித்த எரிவாயு தொகை சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயுவிற்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுகின்றது. கப்பல்களுக்கு எரிவாயுவை ஏற்றும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.  

Read more

மின்சாரக் கட்டண திருத்தம் – மின்சார சபை வெளியிட்ட அறிக்கை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2014-2022 காலப்பகுதியில் மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும் ஒழுங்குமுறை அதிகாரிகள் அதற்கேற்ப மின் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்காததால், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த விடயத்தை மின்சார சபை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள வழிமுறையின்படி, 2024 இன் கடைசி காலாண்டில் திட்டமிடப்பட்ட செலவானது, இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளின் Read More

Read more

ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றிய அநுர: வரலாறு காணாத வெற்றி பெற்ற திசைகாட்டி

நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1,968,716 வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 257,813 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி (NDF) 500,835 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீ Read More

Read more

யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய அனுரவின் திசைகாட்டி – இறுதி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 80830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 3 ஆசனங்களை பெற்றுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 63327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 27983 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர். சுயேட்சைக் குழு 17 இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 27855 வாக்குகளைப் பெற்றுக் Read More

Read more

காலி தபால் மூல வாக்கு: முதல் முடிவிலேயே முன்னணியில் அநுர தரப்பு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி NPP) 32,296 வாக்குகளைப் பெற்றுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,964 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,523 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,846 வாக்குகளைப் பெற்றுள்ளது.    

Read more

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது, அனைத்து துறைகளுக்கும் 6 சதவீத மிதமான அளவாக Read More

Read more

ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி

ஆறு மாதங்களாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிய இத்தாலியில்(italy) இருந்து வந்த மகன் நம்ப முடியாத சம்பவத்தை கண்டுள்ளார். ஆம் வீட்டினுள் தந்தை உயிரிழந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்துள்ளார். களுத்துறை(kalutara) நாகொட பகுதியில் தனது 70 வயதான தந்தை தனியாக வசித்து வந்ததாக மகன் தெரிவித்துள்ளார். இந்த வீட்டில் சிலகாலம் முன்பு வசித்து வந்த தாயும் இறந்துவிட்டார். இத்தாலியில் இருந்த அவரது மகன், இலங்கையில் தந்தையிடம் நலம் விசாரித்துவருவதுடன் மனைவி Read More

Read more

சேதமடைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் : விதிக்கப்பட்ட தடை

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக உடனடியாக அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (18.10.2024) மு. ப 12.00 மணியிலிருந்து 03 நாட்களுக்கு இப் பாலத்தினூடாக கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை  இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் சிற்றூர்தி சேவையில் பயணிக்கும் பயணிகள் மாத்திரம் சில இடங்களில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய Read More

Read more