வெகுவிரைவில் புதிய 2600 ஆசிரியர்கள்….. கல்வியமைச்சர் அதிரடி!!

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்காக, விரைவில் 26 ஆயிரம் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. வடமேல் மாகாணத்தில் குறித்த வேலைத்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு கிரமமான Read More

Read more

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது அவசரகால சட்டம்!!

அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. விவாதம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.    

Read more