வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி – யாழில் இருந்து கொழும்பு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது இதன்படி, ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடான வீதிகளை சாரதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை Read More

Read more