தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு….. அமைச்சரவை முடிவு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அதிரடி அறிவிப்பு!!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம்(31/01/2023) இடம்பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது. தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் Read More

Read more

திங்கட்கிழமை முதல் இரு வாரத்திற்கு ‘பாடசாலைகள்’ மற்றும் ‘பொதுத் துறை அலுவலகங்கள்’ இணையவழியில்!!

இலங்கை அரசாங்கம் திங்கட்கிழமை (20/06/2022) முதல் பொதுத் துறைக்கு இரண்டு வார கால வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   இதன்படி, அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தையும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வார கால இணையவழி கற்றல் முறை திட்டத்தையும், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான Read More

Read more

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் அரசிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று(26/05/2022) முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அத்துடன், அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

Read more

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி அடுத்த வழி பார்க்கும் அரசின் விசேட சுற்றறிக்கை!!

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மகிந்த சிறிவர்தனவால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விசேட சுற்றறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சு, அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முறையையும் வலியுறுத்தியுள்ளது. திட்டச் செலவுகள், எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள், நலன்புரி மற்றும் நிவாரணச் செலவுகளை இடைநிறுத்துதல், அரச துறை ஆட்சேர்ப்பு போன்ற பல அரச சேவைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், மாகாண சபைகளின் Read More

Read more

அரசுக்கு எதிராக அரச அலுவலகத்திற்குள் ஆர்ப்பாட்டம்!!

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (21/04/2022) அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின்  48 ஆவது அமர்வு நேற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்திற்கு Read More

Read more

அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

சமூக ஊடகங்களின் வாயிலாக அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோனால் கடிதம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என கண்டி மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயசிங்கவிற்கு “எச்சரிக்கை விடுத்தல்” எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் Read More

Read more

புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது!!

நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால் புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் நேற்றைய தினம் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் இம்மாதத்திற்கான சம்பளம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மேலும் தெரிவிக்கையில், தமிழ், Read More

Read more

17 அரச தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்புக்கு சொந்தமான மற்றும் இணை சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று(10) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.   சம்பள கொள்கையை மீறி தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, பதவி உயர்வு செயன்முறையில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.   அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு Read More

Read more

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

அதிபர், ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது!!

பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள, 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. இது குறித்து நேற்றைய தினம் அம்பாறை வலய கல்வி அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற வலய கல்வி கணக்காய்வாளர்களின் கூட்டத்தில் கொடுப்பனவை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக Read More

Read more