தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு….. அமைச்சரவை முடிவு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அதிரடி அறிவிப்பு!!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம்(31/01/2023) இடம்பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது. தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் Read More

Read more

17 அரச தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்புக்கு சொந்தமான மற்றும் இணை சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று(10) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.   சம்பள கொள்கையை மீறி தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, பதவி உயர்வு செயன்முறையில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.   அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு Read More

Read more

பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள்….. மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்!!

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயங்குதளங்களின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அடுத்த கட்டமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார். மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை அமுல்படுத்தப்படும் எனவும் Read More

Read more