மாகாண மட்டத்தில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்….. கால அட்டவணை வெளியிட்டார் அரச வைத்திய அதிகாரிகள் சங்க செயலாளர்!!
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(01/11/2023) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார். அத்தோடு, 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை(02/11/2023) ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02/11/2023) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். Read More
Read more