போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாட முற்படடவார்…… பரிதாபமாக மரணம்!!

நேற்று முன்தினம்(10/07/2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெற்றி கிட்டியதை அடுத்து  தேசியக் கொடியுடன் மின்கம்பத்தில் ஏறியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். அவரது சடலம் அலவ்வ கபுவரல புகையிரதப் பாதையில் நேற்று (10/07/2022) கண்டெடுக்கப்பட்டுள்ளது. அலவ்வ குடுமுல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்த லால் குமார் (39 வயது) என்பவரே சடலமாக மீடகப்பட்டவராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

“கோட்டா கோ கம”விற்கு சைக்கிளில் வன்னியிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நபர்!!

காலி முகத்திடலில் இடம்பெறும் கோட்டா கோ கம போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இராசரத்தினம் ஜனகவர்மன் (வயது – 32) என்ற நபர் விசுவமடுவில் இருந்து காலிமுகத்திடலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று (20/05/2022) மாலை வவுனியாவை சென்றடைந்தது. வவுனியாவை அடைந்த அவர் இன்று (21) அனுராதபுரம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஆரம்பித்தார். கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நாட்டு மக்களின் நலன் Read More

Read more

கொழும்பில் மீண்டும் சற்று பதற்றம் ….. குவிக்கப்பட்டுள்ள காவல்படை!!

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்   இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு – ஆட்டுபட்டித்தெரு பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More

Read more

ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக கூறப்பட்ட அமரகீர்த்தியின் பிரேத ப‌ரிசோதனை‌ அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!!

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையானதால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.   அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலை சம்பவம் இடம்பெற்றதும் தகவல்கள் Read More

Read more

33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.   சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு, 1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.   2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.   3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.   4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ Read More

Read more

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் இல்லை….. வடக்கு – கிழக்கு தமிழ் புத்திஜீவிகள் அமையம் !!!

இன்று  வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் இல்லை. பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளும் வழமை போன்று இயங்கும் என வடக்கு கிழக்கு தமிழ் புத்திஜீவகள் அமையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை காரணங்காட்டி தென்னிலங்கையை சேர்ந்த தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு ஹர்த்தால் என அழைப்பு விடுத்துள்ளன. இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் வழமை போன்று தத்தமது இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்த்தாலை Read More

Read more

கொழும்பை வந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் சேர்ந்தது மற்றுமொரு அணி!!

மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி படையெடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளனர்.   கொழும்பின் மொறட்டுவை பகுதியை வந்தடைந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது காலிமுகத்திடலை நோக்கி நகரவுள்ளதாக தெரியவருகிறது.   தற்போது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடித்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவோம்” என்ற அடிப்படிடையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

யாழ். சத்திர சந்தி விபத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு முறையான விசாரணையை கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

யாழ். சத்திர சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, “அதி வேகத்தைக் குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்போம், அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும், மாணவர்களது உயிரைப் பறிக்காதே” என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். சமூக செயற்பாட்டாளர் பி.தனுசியா தலைமையில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பில் வலி. மேற்கு பிரதேச Read More

Read more

காலி முகத்திடல் மைதானத்தில் பாரிய போராட்டம்!!

கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ​​ போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது. எவ்வாறாயினும், Read More

Read more