கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்….. காரணம் டொலர் தட்டுப்பாடு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் சீனிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், சீனி இருப்பு உள்ள கடைகளில் கூட, ஒரு கிலோ, 155 முதல், 160 ரூபாய் வரை, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகிறது. சீனி கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் இது ஒரு Read More

Read more

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் அரிசியின் விலை!!

காணப்படுவதாக புறக்கோட்டை சந்தையை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, அரிசி தட்டுப்பாடு காரணமாக அது நீக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தது. இருப்பினும், சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய, புறக்கோட்டை Read More

Read more

சீனி விலை அதிகரிப்பை தடுக்க, இறக்குமதியாளர்களால் வழங்கப்பட் ஆலோசனை!!

சீனி விலையை கட்டுப்படுத்த இறக்குமதியாளர்கள் தீர்வொன்றை தெரிவித்துள்ளனர். இதன்படி சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையில் வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (27) பிற்பகல் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளது. சீனிக்கு Read More

Read more

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை…. மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!!

இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சில நாட்களாக சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் சீனி சுமார் 200 ரூபாய் உட்பட பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், நாட்டுக்கு தேவையான அளவு சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்றும் நாளையும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் Read More

Read more

என்றுமில்லாதளவில் நாட்டில் சீனிக்கு தட்டுப்படு!!

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போதிலும் நாட்டில் வெள்ளைச்சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஒரு கிலோ வெள்ளை சீனி 170 ரூபா வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. வெள்ளை சீனி தற்போது களஞ்சியசாலைகளில் இல்லையென இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுக்கும்(Lacanta aḻakiyavaṇṇa) சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையே நாளையதினம் Read More

Read more

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கவும்…. சீனி இறக்குமதியாளர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை!!

நாட்டில் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்ட நிலையில் அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் சீனியின் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. எனினும், தற்போது சீனியின் விலை மீளவும் அதிகரித்த நிலையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நாட்டின் முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம்(Basil Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவர்கள் நிதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சந்தையில் வெள்ளை சீனி இல்லை எனவும் சிவப்பு சீனி மாத்திரமே Read More

Read more

மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை…. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண!!

அரிசி, சீனி, பால் மாவு மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று கூறினார். தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனினும் “இது தொடர்பாக நாங்கள் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை,” என்றும் அவர் கூறினார். விநியோகச் சிக்கல்கள், இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு Read More

Read more

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு!!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

சீனி மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை – இன்னும் கிடைக்காத நுகர்வோர் விவகார அமைச்சு அனுமதி!!

அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் இது தொடர்பில் விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சு இது வரை இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேஅரசாங்கம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரத் தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானம் தொடர்பான பரிந்துரைகள்  விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி முடிவு Read More

Read more

“நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை….” அரசாங்கம் அறிவிப்பு!!

போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Read more