திடீரென அதிகரித்த சீனி விலை – கையை விரித்தது அரசாங்கம்

சீனியின் விலை திடீரென அதிகரித்த நிலையில் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என அரசாங்கம் கையை விரித்துள்ளது. நாட்டில் இன்று சீனி கிலோ ஒன்றின் விலை 210 ரூபா வரை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் சீனி விலை 160 ரூபாவாக காணப்பட்டது. எனினும் திடீரென 50 ரூபாவினால் விலை உயர்ந்துள்ளது. எனினும் இவ்வாறு சீனி விலையின் திடீர் உயர்வுக்கு தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன Read More

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை தமக்கு சாதகமாக்கிய வர்த்தகர்கள் – சீனி விற்பனையில் மோசடி!!

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர். இந்நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் சில வர்த்தக நிலையங்களில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நுகர்வோர் அதிகார சபையிடம் சில நுகர்வோர் முறைப்பாடுகளை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

சீனி இறக்குமதிக்கு தடை விதிப்பு!!

இம்மாதம் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி எஸ்.கருணாரத்ன தெரிவித்தார். இதன்படி தற்போதைக்கு இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ள கப்பலில் ஏற்றப்படாத சீனியை இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணப்படும் சீனி தொகை 40 இறக்குமதியாளர்களிடம் இருந்து 200,000 டொன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் தேவையான அளவு சீனி இருப்பதால் இறக்குதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக டொலர் பெறுமதியை பாதுகாக்க Read More

Read more