பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகள்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம். அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

47 KG கட்டியை பெண்ணின் வயிற்றிலிருந்து வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை!!

இந்தியாவின் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 56 வயது பெண் சுமார் 18 வருடங்களாக இந்த கட்டியோடு வாழ்ந்து வந்திருக்கிறார். இந்தியாவில் இதுவரையிலும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய கட்டி என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது அதனுடன் சேர்த்து சில திசுக்கள் மற்றும் கூடுதலான சதைப்பகுதி உள்ளிட்டவையும் அகற்றப்பட்டன. மொத்தத்தில் 54 கிலோ எடை உடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Read More

Read more

திடீர் மின்தடை….. சத்திரசிகிச்சை நோயாளர்கள் எட்டு பேர் பாதிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றையதினம் முற்பகல் வேளை தொடக்கம் திடீரென நாடு முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more