வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த அவலம்

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே மின் கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார். குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக Read More

Read more

ஏ-9 வீதியில் கோர விபத்து..!

ஏ 9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணி அளவில் கனகராயன் குளத்திற்கும், மாங்குளத்திற்கும் இடையில் 212 வது கிலோமீற்றர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து கனரக வாகனம் அங்கிருந்து Read More

Read more

உறவினர்களுடன் சென்ற மாணவனுக்கு நடந்த அவலம்!

கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார். மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் உறவினர்களுடனும் குடும்பத்தினருடன் கும்புக்கன் ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர். நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, ​​மாணவர் திடீரென நீரில் மூழ்கி Read More

Read more

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த விலை குறைப்பு இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பாணின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை 200 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read more

உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைக்கு துணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் ஏகமனதாக இந்த தெரிவினை மேற்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் இந்தப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு செப்டம்பர் வரையில் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சார்பில் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிவியா, கொங்கோ, எஸ்டோனியா, காம்பியா, ஐஸ்லாந்து, ஈரான், மலேசியா, Read More

Read more

உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இந்த வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கை ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி நேற்று(02.06.2023) வரை வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி Read More

Read more

சடுதியாக குறைவடையவுள்ள எரிவாயு விலை….. வெளியாகிய அறிவிப்பு!!

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் நடைமுறைப்படுத்தபடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது. மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

கட்டாயம் பதிவு செய்யவேண்டியவர்கள்….. வெளியானது வர்த்தமானி!!

இன்று (01) முதல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பின்படி,   இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இலங்கையின் Read More

Read more

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்….. இன்றைய வானிலை அறிவிப்பு!!

நாடு முழுவதும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் Read More

Read more

யாழ் மாவட்ட காவல்துறையினரின் விசேட ரோந்து நடவடிக்கை….. கோரிக்கை விடுத்த அமைச்சர்!!

வார இறுதி நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் காவல்துறையினரின் நடமாட்டத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ் மாவட்ட Read More

Read more