காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைகள்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம். அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

ஒன்பது மாதப் பெண் குழந்தை யாழ் போதனா மருத்துவமனையில் மரணம்!!

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து நேற்று காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் மாற்றப்பட்டுள்ளது. எனினும், குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரும் Read More

Read more

யாழில் மீண்டும் மலேரியா நோய்!!

நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரியா அறிகுறிகளுடன் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் Read More

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது கவனயீர்ப்பு போராட்டம்!!

அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாடு தழுவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் 7 Read More

Read more