பணி பகிஸ்கரிப்பில் குதித்த ஆசிரியர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்லைன் முறையில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடத்தப்படுகிறது. அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றி போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேற்படி பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

இணைய வழி கற்பித்தல்- ஆசிரியர் சங்கங்கள் இன்று முதல் எடுத்துள்ள தீர்மானம்!!

இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ள இணைய வழி ஊடான கற்பித்தல் புறக்கணிப்புக்கு அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் Read More

Read more

அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது!!

ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தினார். நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை விரைவாக ஏற்றுவதற்கு ஜனாதிபதியின் பூரன ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார். அதற்கமைய, நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், Read More

Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற தீர்மானம்!!

நாட்டின் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதனிடையே, ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 Read More

Read more

இணையக் கல்வி சம அளவில் கிடைக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!!

அனைத்து மாணவர்களுக்கும் இணையக் கல்வி சம அளவில் கிடைக்காமையால், பாடசாலை மாணவர்களின் உரிமை மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கிழக்கு மாகாண கல்வி செயலாளர் கிறிஸ்டி பெர்ணாந்து, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் Read More

Read more

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது எப்போது? கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

பாடசாலை மாணவர்களுக்கு வெகுவிரைவில் தடுப்பூசிகளை வழங்கி விட்டால் ஜுலை மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. 7 லட்சம் தடுப்பூசிகளை, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் Read More

Read more

ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ள வசதி – கல்வி இராஜாங்க அமைச்சர் தகவல்!!

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். கொரோனாதொற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பெரும் தியாகத்தை செய்து வருகின்றனர். மாணவர்களின் சிரமங்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களின் சிரமங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துளளார்.

Read more

ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றம்! மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக  இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Read more

அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுசெல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07/05/2021) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். பிரபல பாடசாலைகளுக்கு செல்வது என்பது தற்போதைய மாணவர்களின் நோக்கமல்ல எனவும், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதிலேயே பெற்றோர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்வாண்டு க.பொ.த. உயர்தரப் Read More

Read more