சிறுத்தை புலியின் உடலம் தோட்ட தேயிலை மலையில் இருந்து மீட்பு!!

புளியாவத்தை பிலிங்பொனி தோட்ட தேயிலை மலையில் இருந்து சிறுத்தை புலியின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை வேலையில் ஆறுவயது மதிக்கதக்க சிறுத்தை புலியின் உடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தேயிலை மலையில் தொழில்புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குறித்த சிறுத்தை புலியினை இனங்கண்டுள்ளனர். தொழிலாளர்கள் நோர்வூட் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் காவல்துறையினர் நல்லதன்னி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். Read More

Read more