Bio-Bubble திட்டத்தின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தலங்களை திறக்க தீர்மானம்!!

பயோ பபிள் (Bio-Bubble) திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அனைத்து சுற்றுலாத் தலங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, அனைத்து சுற்றுலா அனுமதிப்பத்திரங்களையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read more