சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read more

Bio-Bubble திட்டத்தின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தலங்களை திறக்க தீர்மானம்!!

பயோ பபிள் (Bio-Bubble) திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அனைத்து சுற்றுலாத் தலங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, அனைத்து சுற்றுலா அனுமதிப்பத்திரங்களையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read more

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.    

Read more

உக்ரைன் சுற்றுலா பயணிகளால் இலங்கையில் கொரோனா பரவும் அபாயம்?

உக்ரைனிலிருந்து அந்நாட்டு சுற்றுலாக்குழுவை அழைத்துவருகையில் ஒருசில முறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாக் குழுக்களினால் நாட்டில் தொற்று பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் யால போன்ற பூங்காவுக்கு சென்ற உக்ரைன் நாட்டவர்கள் குறைந்த பட்சம் முகக்கவசத்தைக்கூட அணிந்திருக்கவில்லை என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார். இதேவேளை உலக நாடுகளில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நாடுகளின் பட்டியலில் உக்ரைன் 17வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. Read More

Read more

சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பு!

உக்ரைன் நாட்டில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் பொலனறுவை மற்றும் சிகிரிய இன்று மற்றும் நாளை செல்ல ஏற்பாடு செய்திருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது. உக்ரைன் சுற்றுப்பயணிகள் குழு வருவதனால் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு பல சுற்றுலாத் தளங்களைப் பார்வையிட தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக பொலனறுவை மற்றும் Read More

Read more