புகையிரத தாமதம் ஏற்படலாம்: இலங்கை புகையிரத திணைக்களம்
இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், பிரதான பாதையில் புகையிரதம் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், வயங்கொடைக்கும் கம்பஹாவுக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
Read more