புதுப்பொலிவுடன் காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையை தொடங்கியது “யாழ் ராணி”!!

காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து இன்று(28/07/2022) முதல் புதியதொடருந்து பெட்டிகளுடன் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. யாழ் ராணி தொடருந்தானது ஆரம்பம் முதல் இன்று வரை பழைய பெட்டிகளுடனே தனது சேவையை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில், இந்தியாவின் உதவியுடன் யாழ் ராணி தொடருந்து புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை இன்று(28/07/2022) முதல் ஆரம்பித்துள்ளது. இதேவேளை, யாழ் ராணி தொடருந்தானது காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 6.00 க்கு தனது பயணத்தை தொடங்கி முறிகண்டி வருகை தந்த Read More

Read more

தொடருந்து கட்டணங்கள் உயர்வு…… இரு மடங்கானது குறைந்தபட்ச கட்டணம்!!

நாளை( 22/07/2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, 10 ரூபாவாக இருந்த 3 ஆம் வகுப்புக்கான குறைந்தபட்ச பயணக் கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடருந்து கட்டணங்கள் மற்றும் பிற தொடருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக Read More

Read more

ஜேர்மனியில் மாணவர்களுடன் சென்ற ரயில் தடம் புரண்டது!!

ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜேர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read more

அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு!!

யாழி அரியாலையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை உள்ளதாகவும், அதனால், அப்பகுதியில் அடிக்கடி புகையிரத விபத்துக்கள் Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

அனைத்து பேருந்து கட்டணங்களும் இன்றிரவு முதல் அதிகரிக்கப்படும்….. புதிய போக்குவரத்து அமைச்சர்!!

நாட்டில் பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.   பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   அதற்கமைய, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச Read More

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்….. பெருமளவில் வீணாக வழிந்தோடும் டீசல்!!

ரம்புக்கன புகையிரத நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் டீசல் கொள்கலன் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் கொள்கலன் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. டீசல் கொள்கலன் ரயில் நிறுத்தியிருந்த தண்டவாளத்தில் பயணிகளை ஏற்றி வந்த ரயிலை நிறுத்த முற்பட்ட போதே மோதி Read More

Read more

தமிழர் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்….. விபரங்கள் வருமாறு!!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மேலதிகமாக 1,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இருப்பினும், போதுமான அளவு டீசல் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தூரப்பிரதேசங்களுக்கு சேவையில், தனியார் பேருந்துகள் ஈடுபட மாட்டாதென இலங்கை தனியார் பேருந்து Read More

Read more

தொடருந்து சாரதிகள் மற்றும் மேலதிக நேர சேவையில் ஏனைய ஈடுபடும் சாரதிகள் வேலை நிறுத்தத்திற்கு தீர்மானம்!!

தொடருந்து சாரதிகள் அனைவரும் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தொடருந்து தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட தெரிவித்தார். மீள்திருத்தம் செய்யப்பட்ட புதிய தொடருந்து கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டிருந்தார். குறித்த கட்டண மாற்றத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை முதல் Read More

Read more

புகையிரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்….. உடல் சிதறி ஒருவர் மரணம்!!

சீதுவை – தலுபொத வீதி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் தொடருந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கட்டுநாயக்க, குரண பிரதேசத்தை சேர்ந்த  27 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சீதுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more