அடுத்த இரண்டு வார காலப் பகுதியில் ஊரடங்கா!!

எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு அமைய, மீண்டும் ஊரடங்கு சட்டம் விதிப்பதா? அல்லது பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதா? என தீர்மானிக்கப்படும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடுவ (Ranjith Badduvanthuduwa) தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்தும் கலந்துரையாடப்படும். மேலும், Read More

Read more

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் வழங்குங்கள்…. அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!!

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum amunugama) தெரிவித்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்துடன், போக்குவரத்து அமைச்சில் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கொவிட்-19 பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக, பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய, அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு Read More

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்…. Dr. அசேல குணவர்தன!!

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டால், பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)தெரிவித்துள்ளார். மக்கள் மிகவும் கவனமாக செயற்படாவிட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றும், நாடு முழுவதும் 15 ஆம் திகதி திறக்க முடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு மக்களை கடுமையாக வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். Read More

Read more