இலங்கைக்கான வாகன இறக்குமதி: ரணில் கைக்கு சென்ற அதிகாரம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் நிதியமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகன இறக்குமதி தடையை நான்கு கட்டங்களாக தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு இது தொடர்பான காலக்கெடுவையும் முன்வைத்துள்ளதுடன் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்ததன் பின்னர் அதிபர் இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் வருடாந்தம் சுமார் 340 மில்லியன் ரூபா சுங்க வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் Read More

Read more

தொடரும் சீரற்ற காலநிலை….. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளன முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22/05/2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது Read More

Read more

காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

எரிபொருள் கப்பல் வருகை தெடர்பாக மகிழ்ச்சியான செய்தி!!

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, பெரும்பாலும் 15 ஆம் அல்லது 16 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கப்பல் வரும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால் இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

சர்வதேச நாணய நித்தியத்திடமிருந்து கையிருப்பிற்காக….. ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன்!!

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கேற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடனாக அன்றி கையிருப்பாக அந்த நிதி வைப்புச் செய்யப்படவுள்ளதோடு இதன் மூலம் வெறுமையாக உள்ள இலங்கை கையிருப்பு ஒரு பில்லியன் டொலர்களாக Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

சுடடெரிக்கும் வெயிலில் பச்சிளம் குழந்தையின் கை காலை கட்டிப்போட்டு தவிக்க விட்ட அரக்கர்கள்!!

சுட்டெரிக்கும் மதிய வேளையில் சுடடெரிக்கும் வெயிலில் சிறுமியின் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் தவிக்க விட்ட சம்பவ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது Viral ஆகி வருகிறது. அந்தக் குழந்தை சூடு தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட்டு கதறி அழுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், டெல்லி போலீசாரின் Twitter பதிவை பார்வையிட Read More

Read more

ஒரு கையில் குழந்தை, மறுகையில் பயணப்பை….. கேபின் கதவை அசால்ட்டாக மூடி Trending ஆகிய தாய்(Video)!!

விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது. வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு Read More

Read more

வாடகை ஹெலிகொப்பரரில் வந்து பிறந்தநாள் கொண்டடிய பெண்….. சிறுப்பிட்டியில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இளைஞர் ஒருவர் பட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்ட விடயம் வைரலாகியுள்ள அதேநேரம், யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது. தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்பரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார். வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். அவர் ஹெலிகொப்டரில் வந்திறக்குவதைக் ஏராளாமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து Read More

Read more

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் நடந்துகொண்ட விதம் மிகவும் நாகரீகமானது (காணொளி)….. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க!!

துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கொழும்ப பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது  ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், தமது சுதந்திரத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் மாணவர்கள் நடந்துகொண்டனர் எனவும் பாராட்டியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போது சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தனர். Read More

Read more