விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது. லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் Read More

Read more

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளின் பிரச்சனைகள் விஷேட விவாதத்திற்காக….. ஆரம்பமானது ஐ. நா சபையின் மீளாய்வு கூட்டத்தொடர்!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று(27/02/2023) ஆரம்பமானது. இலங்கை, எகிப்து, துர்க்மெனிஸ்தான், ஜாம்பியா, பேரு மற்றும் பனாமா உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடரே இன்று(27/02/2023) முதல், எதிர் வரும் மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடர் மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி Read More

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா சபையில் “பச்லெட்டிடம்” சமர்ப்பிக்கப்பட்டது!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ‘யாஸ்மின் சூகா’ 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார். குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கோட்டாபயவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது விசாரணை அறிக்கை இதுவாகும். 18 முன்னாள் இராணுவ Read More

Read more

மின்னலொன்று படைத்தது புதிய சாதனை….. ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த மின்னலின் தூரம் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு Read More

Read more

இலங்கை “அணு ஆயுத” ஆவணத்தில் கையெழுத்திட தீர்மானம்!!

அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும் அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அனுமதி கிடைத்துள்ளது. அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி Read More

Read more

ஐ.நாவில் ஈழ யுவதிக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்!!

UNICEF இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து யுவதி செல்வி. G.சாதனா தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார். தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது UNICEF. அதன் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் (deputy Director of Mission Council) G.சாதனா Read More

Read more

2030 இற்கு முன் முடிவிற்கு கொண்டுவருவோம்….. உலகத் தலைவர்கள் சபதம்!!

உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் “Plan is to end deforestation by 2030” வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் உறுதியளித்துள்ளனர். எனினும், இந்த மாநாட்டின் மூலம் ஒன்று சேரந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மனித குலத்தின் எதிர்காலத்தை தீவிரமாக எடுக்காமல் பாசாங்கு செய்வதாக காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பேர்க் தெரிவிக்கின்றார். உலக வெப்பமாதலை தடுக்கும் வகையில் கோப் – 26 காலநிலை மாற்ற மாநாட்டில், தமது நாடுகள் வெப்பமாதலை தடுக்கும் வகையில் Read More

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஆரம்பம்!!

உலகளாவிய ரீதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஸ்கொட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் ஆரம்பமாகியுள்ளது. சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 2030 ஆம் ஆண்டிற்குள் காபன் வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது மற்றும் பூமியின் நிலைபேறுகைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடவுள்ளனர். மனிதர்களால் ஏற்படும் சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியிடப்படும் காபன் காரணமாக உலகம் வெப்பமடைந்து வருவதால், காலநிலை பேரழிவைத் தவிர்க்க அவசர Read More

Read more

UN இன் 76ஆவது கூட்டடத்தொடரில் இன்று இலங்கை ஜனாதிபதியின் உரை!!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின் உயர்மட்ட விவாதம் நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இம்முறை ஆரம்பமாகிய கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக,இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ நியூயோர்க் Read More

Read more

இன்று ஆரம்பமாகிறது ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர்!!

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை 22ஆம் திகதி  விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனையடுத்து 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் அரச தலைவர் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் 18ஆம் திகதி நியூ யோர்க் சென்றடைந்தனர். Read More

Read more