யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் தாக்குதல்….. மடக்கிப் பிடித்த மாணவர்கள்!!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை பல்கலை மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலை வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நினைவேந்தல் நிகழ்விற்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி நினைவேந்தலில் பங்குகொண்டனர். நிகழ்வு முடிவுற்ற பின்னர் அங்கு நின்ற மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய Read More
Read more