நான் பதவியை ஏற்க மாட்டேன்….. பிரதமர் ரணிலின் கோரிக்கைக்கு ஹர்ஷ டி சில்வாவின் பதில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ‘ஹர்ஷ டி சில்வா’ தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா, “இளைஞர்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பொன்றை எதிர்பார்க்கிறார்கள், அதை நான் எதிர்க்க முடியாது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக என்னால் செல்ல முடியாது. என்னை நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளை மக்கள் Read More

Read more

கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திலும் வாயு கசிவு….. முஜிபுர் ரகுமான்!!

மிரிஹானவில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திலும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம், நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய எரிவாயு நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு புதிய எரிவாயு தாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more

டொலர் நெருக்கடிகளுக்கு இரு மாற்று வழிகள் உள்ளன….. கலாநிதி ஹர்ஷ டி சில்வா!!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிகளுக்கு இரு மாற்று வழிகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதும்  வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்துவதும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Harsha d Silva)தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும்  தெரிவிக்கையில், இரண்டாவது தெரிவான மீள்திட்டமிடலுக்குச் சென்றால் செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை அடுத்ததடுத்த ஆண்டுகளுக்கு பிற்போட முடியும். எனவே, இதன் மூலம் Read More

Read more