பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் தகவல்!!

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.11.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான கட்ஆஃப் (Cut-off) புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  வரலாற்றில் முதல் தடவை இவ்வாறு வெளியிடப்பட்டால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியானவையாக கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகளும் கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Read more

தூக்கில் தொங்கிய ஊர்காவற்துறையைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன்….. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம்!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் உடல் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16/06/2023) மீட்கப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவ கட்டுவல பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட மாணவர் விடுதியின் தரைத்தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விடுதியின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர ஒருவர் இன்று (16/06/2023) அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து கீழே வந்து கொண்டிருந்த போது Read More

Read more

12 வயதில் உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் பல்கலைக்கழக பட்டமொன்றை பெறவுள்ள சிறுமி!!

கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில்(University of Ottawa) உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார். கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ்(Anthea Grace Patricia Dennis) என்ற குறித்த  சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார். பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது. Read More

Read more

யாழில் ஒரு மூட்டை நெல் கொடுத்து – 6 லீற்றர் பெற்றோல் வாங்கி….. அதில் 02 லீற்றர் ஐ பிறந்தநாளுக்கு பரிசளித்த பல்கலைக்கழக மாணவி!!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்ததினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள். அப்போதே, குறித்த மாணவி நெல்லு கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார். யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் Read More

Read more

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் தாக்குதல்….. மடக்கிப் பிடித்த மாணவர்கள்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை பல்கலை மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலை வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நினைவேந்தல் நிகழ்விற்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி நினைவேந்தலில் பங்குகொண்டனர். நிகழ்வு முடிவுற்ற பின்னர் அங்கு நின்ற மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர்.   பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய Read More

Read more

போராட்டத்தில் இறங்கினர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

கொழும்பில் தாமரைத்தடாகம் முன்பாக தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இவேளை குறித்த பேரணியானது பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், அங்கு வீதித் தடைகளும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன் தண்ணீர் தாரை பிரயோக வண்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, அரச தலைவர் மாளிகை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எங்கு செல்லவுள்ளது என்பது Read More

Read more

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பெரும் போராட்டம்!!

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சிக்குண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பெருமெடுப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது குறித்த மாணவர்களின் போராட்டமானது பரமேஸ்வர வீதி ஊடாக பலாலி வீதியில் சென்றடைந்து தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான சூழ்நிலையினை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பான்மையின Read More

Read more

யாழ் பல்கலையின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு, எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்….. 2619 பேருக்கு பட்டங்கள்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.   முதல் இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர்.   இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று யாழ். பல்கலைக்கழக சபா Read More

Read more

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு திறந்துவைக்கப்பட்ட்து!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிதியாக கலந்து கொண்ட அரச தலைவர் பல்கலைக்கழக பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன், பல்கலைக்கழத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண்டபத்தினையும் திறந்து Read More

Read more

யாழ் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் மரணம் (புகைப்படங்கள்)!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக்கற்கை துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை – மரக்கலையை சேர்ந்த நவரட்ணம் தில்காந்தி (வயது -26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். ஊவா மாகாணத்தின் பின்தங்கிய Read More

Read more