போராட்டத்தில் இறங்கினர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

கொழும்பில் தாமரைத்தடாகம் முன்பாக தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர். இவேளை குறித்த பேரணியானது பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், அங்கு வீதித் தடைகளும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன் தண்ணீர் தாரை பிரயோக வண்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, அரச தலைவர் மாளிகை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எங்கு செல்லவுள்ளது என்பது Read More

Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வாயில்களை மறித்து போராட்டத்தில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் மாணவர்கள் இந்த மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Read more

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் நடந்துகொண்ட விதம் மிகவும் நாகரீகமானது (காணொளி)….. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க!!

துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கொழும்ப பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது  ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், தமது சுதந்திரத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் மாணவர்கள் நடந்துகொண்டனர் எனவும் பாராட்டியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போது சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தனர். Read More

Read more