நெருக்கடியிலும் மீண்டும் பொதுமக்களுக்கான அடுத்த கட்ட தடுப்பூசி ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியில் மீண்டும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே, இன்றைய தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி Read More

Read more

கிடைத்தது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கான அங்கீகாரம்!!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எந்த இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் என்பதை அமைச்சு எதிர்காலத்தில் முடிவு செய்யும். கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் Read More

Read more

தடுப்பூசி அட்டைகள் தொடர்பில் MOH விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி என மருத்துவர் அன்வர் ஹம்தானி (Anwar Hamdani) தெரிவித்துள்ளார். “தடுப்பூசி போடுவது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்,” என அவர் கூறினார். மேலும், தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன என்று தெரிவித்தார். அதேவேளை, இலங்கையில், Read More

Read more

பொதுப்போக்குவரத்துக்களில் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டைகள்….. அமைச்சர் திலும் அமுனுகம!!

தடுப்பூசி அட்டைகள் பொதுப்போக்குவரத்துக்களின் போது கட்டாயமாக்கப்படும் என்று  ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று சுகாதார பிரிவினர் அறிவித்தால், அதன்படி, போக்குவரத்துறையில், நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் மாத்திரமே போக்குவரத்து பேருந்துக்களில் பயணிக்கமுடியும் என்று அந்த அமைச்சு கூறினால், அதனை போக்குவரத்து அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் திலும் அமுனுகம Read More

Read more

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Dr. Chitramali de Silva) தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more

குடிமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசியை பெறுவதை கட்டாயமாக்கிய ஐரோப்பிய நாடு!!

ஒஸ்ரியா நாட்டின்  பிரஜைகள் அனைவரும் கொவிட் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாடுகள் ஏற்கனவே முதியவர்கள் அல்லது சுகாதார ஊழியர்கள் கொவிட் தடுப்பூயை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் தமது நாட்டுக்கு குடிமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வரவில்லை.   இந்நிலையிலேயே, ஒஸ்ரியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்,v Read More

Read more

திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கு தடுப்பூசி அட்டை கட்டயம்!!

கம்பகா மாவட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க  கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. மினுவாங்கொடை கொரோனா தடுப்புக்குழுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும், சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு Read More

Read more

தடுப்பூசி செலுத்தியதை உறுத்திப்படுத்தும் அப்ளிகேஷன் இந்த மாத இறுதியில் அனைவரது மொபைல்களுக்கும்!!

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விபரங்களை உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்று (APP) உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்  அசேல குணவர்தன (asela gunawardena) தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் இலத்திரனியல் அடையாள அட்டை ஒன்றை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று  (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக இலத்திரனியல் அடையாள Read More

Read more

பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு கட்டாயமாக்கப்பட்டது தடுப்பூசி அட்டை!!

இலங்கையில், தடுப்பூசி அட்டை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அண்மையில், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Read More

Read more