22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More

Read more

மோட்டார் சைக்கிள் – கனரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – உயிரிழந்த 14 வயது சிறுவன்….. வடமராட்சி கொற்றாவத்தையில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (24/08/2023) மதியம் கரணவாய் வடமேற்கு கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (14 வயது) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த சில வருடங்களாக கொற்றாவத்தை Read More

Read more

யாழ் தொண்டமானாறு – அக்கரை கடலில் மூழ்கி ஒருவ‌ர் ப‌லி!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (09/08/2023) மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஹெரோயினை ஊசி மூலம் பயன்படுத்திய 10 வயது சிறுவன் கைது….. யாழ் – வடமராட்சி பகுதியில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று(03/05/2023) சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி – துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்  உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோயினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஹெரோயினை ஊசி மூலம் குறித்த சிறுவன் பயன்படுத்திய நிலையில் Read More

Read more

யாழ் – பருத்தித்துறையில் 21 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

சகோதரியின் உயிர் இழப்பை தாங்கிக் கொள்ளாத இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையை ஜெயக்குமார் பானுதன் எனும் 21 வயது இளைஞராவர். திருமண மண்டபம் ஒன்றில் வேலை பார்த்து வரும் மேற்படி இளைஞர் வேலை முடித்து நேற்று முன்தினம்(07/01/0/2023) சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் , நேற்று ஞாயிற்றுக்கிழமை(08/01/2023) அதிகாலை ஒரு மணியளவில் கதவைத் திறந்து பார்த்த போது அவர் தவறான முடிவெடுத்து Read More

Read more

வடமராட்சியை சேர்ந்த 19 வயது காதலி ‘அலரி விதை’ மற்றும் ‘மாத்திரைகள்’ சாப்பிட்டு தற்கொலை….. வலிகாமத்தை சேர்ந்த காதலனும் தற்கொலை முயற்சியால் அவசர சிகிச்சையில்!!

காதலி தற்கொலை செய்து கொண்டதை தாங்கமுடியாத இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தவறான முடிவெடுத்த நிலையில் கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.   இந்நிலையில், நேற்று முன்தினம் Read More

Read more

வடமராட்சி கிழக்கில் ஆண் ஒருவரின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு இன்று வருகை தந்த மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது. இது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் என சந்தேகிக்கப்படுவதாக மருதங்கேணி காவல்துறையினர் Read More

Read more

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளது!!

யாழ் வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும், 8 அரை பவுண் நிறையுடைய சுமார் Read More

Read more

“அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்”….. போராட்ட களத்தில் உயிரிழந்த மீனவர்களின் ஆத்மா கருத்து!!

உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் “அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்” என ஒருவர் கோரிக்கை விடுத்து மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஐந்தாவது நாளாக நேற்றைய தினமும் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கருப்பு உடை தரித்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் வடமராட்சி சுப்பர்மடம் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து Read More

Read more

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி மீனவர்கள்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். அந்நிலையில், நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை Read More

Read more