சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி மீனவர்கள்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். அந்நிலையில், நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை Read More

Read more

பொலிகண்டி ஆலடியில் படகுகளை எரித்து போராட்டத்தில் மீனவர்கள்!!

தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக பொலிகண்டி ஆலடிப் பகுதியில் தமது படகுகளை எரித்து போராட்டத்தை கடற் தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்திய இழுவைப் படகுகளை அனுமதிக்க கூடாது என்றும், உயிரிழந்த இரண்டு கடற் தொழிலாளர்களுக்கு நீதி கோரியும், அமைச்சர் இதற்கான நடவடிக்கையை எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் யாழ். செயலகம் Read More

Read more

பருத்தித்துறைக்கு வடக்கே 300 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்!!

தென்கிழக்கு ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் (12.3Nஇற்கும்81.2E இற்கும் இடையில்) நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையளவில் வட தமிழ்நாட்டு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் Read More

Read more

உடுப்பிட்டியில் இரு பகுதியினருக்கிடையே மோதல்…. குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!!

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

வல்வெட்டித்துறையில் நடந்த கொடூரம் – கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று  நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து Read More

Read more

யாழ். வல்வெட்டித்துறையிலும் அதிகரித்து வரும் ஆபத்து!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று மேலும் 40 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று நாள்களில் 88 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ். பருத்தித்துறை பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more