கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து….. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!
இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில், இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, எம்.எஸ்.எம்.கரீம் ( வயது – 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Read more