திடீரென தீப்பற்றியெரிந்தது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி!!
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றியெரிந்ததால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரதநிலைய வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது. குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more