மீண்டும் வாகன இறக்குமதி!!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal )தெரிவித்துள்ளார். நேற்று(12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைத் பெற்றுத்தரக்கூடிய சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எதிர்வரும் மாதங்களில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ‘வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர Read More

Read more

சொகுசு வாகன தடைகளிற்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது 6.5 கோடி பெறுமதியான சொகுசு வாகனம்!!

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது. இந்த காரின் மதிப்பு இலங்கையில் சுமார் ஆறரைக்கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி ஒருவர், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த கார் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார். அந்த கார் வேறொருவரால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி Read More

Read more

முடிவிற்கு வரும் வாகனதாரர்களுக்கு கொடுக்கப்படட கால அவகாசம்!!

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராத பற்றுச்சீட்டுக்கான மேலதிக அபராதக் கட்டணம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வரை மேலதிக அபராத கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Read more