விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 Read More

Read more

13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்கு visa இல்லமல் செல்ல அனுமதி….. கனடா அரசு அதிரடி அறிவிப்பு!!

13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 06/06 /2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள் Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த சலுகை அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது Read More

Read more

வேலைக்க வெளிநாடு சென்று வந்து மீண்டும் செல்ல உள்ளோருக்கு புதிய சட்டம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.   அதனடிப்படையில், Read More

Read more

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இந்த இரண்டு பணி நேரங்களும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும்.   இதேவேளை, Read More

Read more

“கோல்டன் பரடைஸ் விசா திட்டம்” இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான கோல்டன் பரடைஸ் விசா திட்டம்(Golden Paradise Visa Program) இன்று(31/05/2022) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல் ஆகியவற்றிற்கு வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா இன்று இடம்பெற்றது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு Read More

Read more

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு புதிய நிபந்தனைகளை வெளியீடு….. முழுமையான விபரங்கள்!!

முன்பதிவு செய்துகொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 17ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பு!!

ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17/05/2022) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்காக, www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை Read More

Read more

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா!!

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் Read More

Read more

சட்டவிரோதமாக இலங்கை வர முயன்றவர் கைது!!

தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு தனுஷ்கோடி – மெரைன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருவதற்கு தனுகோடிக்கு வந்துள்ளார். சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மெரைன் காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்தனர். Read More

Read more

உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்!!

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அமெரிக்கா செல்வதற்கான விஸாவை பெற்று, கொவிட் பரவல் மற்றும் வேறு காரணங்களால் செல்ல முடியாது போனவர்களை உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புகொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. U.S. Embassy Colombo இன் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.

Read more