“கோல்டன் பரடைஸ் விசா திட்டம்” இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான கோல்டன் பரடைஸ் விசா திட்டம்(Golden Paradise Visa Program) இன்று(31/05/2022) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல் ஆகியவற்றிற்கு வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா இன்று இடம்பெற்றது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு Read More

Read more

கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கு புதிய நிபந்தனைகளை வெளியீடு….. முழுமையான விபரங்கள்!!

முன்பதிவு செய்துகொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 17ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா!!

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் Read More

Read more