இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் 

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more