அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை….. அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும், அதிகரிக்கும் நடவடிக்கைகாளில் ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ‘லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர்’ கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழுக் கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், இராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு Read More

Read more

பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்…. அமைச்சர் சரத் வீரசேகர!!

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் அழுத்தம் கொடுத்தால் அதிபர், ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இந்த எச்சரிக்கையை விடுத்த சரத் வீரசேகர, ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுவதாக Read More

Read more

5 மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிகை…. தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்!!

நாட்டின் 5 மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கே இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பல பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது. இதனால் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more