உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்பவுள்ள ஜேர்மனி!!

‘ஜேர்மனி 1,000 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது’ என்ற தகவலை அந்தநாட்டு அரசு உறுதிசெய்துள்ளது. மோதல் நிகழும் பகுதிகளுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகால கொள்கையில் பெரிய மாற்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது. “இந்தச் சூழ்நிலையில், விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு எதிராக உக்ரைனை பாதுகாப்பதில் எங்களால் முடிந்தவரை ஆதரவளிப்பது எங்கள் கடமை,” என்று ஜேர்மன் அரசுத் தலைவர் ஓலோஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

Read more

காலி கடற்பரப்பில் பெருமளவான ஆயுதங்கள்!!!!

காலி கடற்பரப்பில் பெருமளவு ஆயுதங்கள் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. படகொன்றிலிருந்து கப்பலிற்குள் ஆயுதங்களை ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆயுதங்களை ஏற்ற பயன்படுத்தப்பட்ட வலை அறுந்துவிழுந்தது என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read More

Read more