யாழ்ப்பாணத்தில் வீதிகளை மேவிப்பாயும் வெள்ளம் : போதுக்குவரத்து தடைப்பட்டது
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக கொட்டித்தீர்க்கும் மழையால் யாழ்ப்பாணத்தில்(jaffna) பல வீதிகளை மேவி வெள்ளம் பாய்ந்த வண்ணமுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக செம்மணி – நல்லூர்(nallur) வீதி நீரில் மூழ்கியுள்ளது. குறித்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட வேண்டாம் என வாகன சாரதிகளை யாழ்ப்பாணம் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் சமிலி பலிகண்ன தெரிவித்தார். சீரற்ற வானிலை, தொடர் கனமழையால் நல்லூர் பகுதி வெள்ளக்காடானது. Read More
Read more