இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

திடீரென தீப்பற்றிய தேசிய சேமிப்பு வங்கி!!

திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தீ அணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறு தீ ஏற்பட்டது போன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கிக்கு அருகாமையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read more

பல இடங்களில் காலநிலையில் மாற்றம் – கடும் எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.   வடக்கு மாகாணத்தில் காலை Read More

Read more