யாழில் மாபெரும் கண்டனப்பேரணிக்கு அழைப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.   ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.   கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம்,பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.   நாளை மறுதினம் (07/04/2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Read More

Read more

கோதுமை மாவின் விலை 40/= அதிகரிப்பு….. பாண், பனிஸ், கொத்து தொடக்கம் உணவுப் பொதிவரை அனைத்தின் விலையும் கடுமையாக உயர்வு!!

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.   இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமா மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.   மேலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.   பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.   இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் Read More

Read more

400 ரூபாவாகும் பாணின் விலை….. பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன!!

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (NK Jayawardena) தெரிவித்துள்ளார். மேலும் கருத்தத் தெரிவித்த அவர், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது. அதனால், பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. .   இன்று Read More

Read more

முக்கிய உணவுப்பொருட்கள் இரண்டு உட்பட, இன்று முதல் மேலும் அதிகரிக்கவுள்ள விலைவாசி!!

நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு நிலவுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  தெரிவித்தார். மேலும், கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று  எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே இன்று Read More

Read more

450 கிராம் நிறை கொண்ட பாணின் விலை இன்று முதல் ரூ .5 ஆல் உயர்வு!!

450 கிராம் நிறை கொண்ட பாணின் விலை இன்று (12 ம் திகதி) முதல் ரூ .5 ஆல் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே. ஜெயவர்த்தன தெரிவித்தார். அத்துடன் அனைத்து தின்பண்டங்களும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று (11 ம் திகதி) முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை10 ரூபாவால் உயர்த்தப்பட்டதை அடுத்து சங்க உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பேக்கரி தொழில் இன்று Read More

Read more