கரு.பழனியப்பனின் “கள்ளன்” படத்திற்கு பல தடைகளுக்கு மத்தியில் U/A சான்றிதழ் கிடைத்தது!!
தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பனின் கள்ளன் பட பிரச்சனை முடிவுக்கு வந்தது.
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை போன்ற பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பயணித்து வருகிறார்.
கரு.பழனியப்பன் அடுத்து கதாநாயகனாக ”கள்ளன்” படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார்.
இதில்,
நிகிதா, வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
கள்ளன் படத்தின் டைட்டிலுக்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பின் ‘கள்ளன்’ படத்தின் தலைப்பை மாற்றாமல் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்,
இதனை விசாரித்த நீதிபதி இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் ‘கள்ளன்’ படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம் படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பை வைத்து U/A சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.