இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் வெளியீடு! தமிழன் நடராஜனுக்கு இடமில்லை… ஏன்?
பிசிசிஐ அமைப்பின் மத்திய ஊதியக் குழு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம் கீழே,
ஏ பிளஸ் பிரிவு: (ரூ.7கோடி) விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா
ஏ பிரிவு: (ரூ.5 கோடி ஊதியம்) ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஷிகர் தவண், கேஎல் ராகுல், முகமது ஷமி, இசாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா
பி பிரிவு ( ரூ.3 கோடி) விருதிமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால்
சி பிரிவு(ரூ.ஒரு கோடி) குல்தீப் யாதவ், நவ்தீப் ஷைனி, தீபக் சஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, அக்ஸர் படேல், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சஹல், முகமது சிராஜ்
இதில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பிசிசிஐ விதிகளின்படி, ஒரு வீரர் குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் இந்த ஒப்பந்ததுக்கு கீழே வர முடியும்.
ஆனால் இந்தளவுக்கான சர்வதேச போட்டிகளில் நடராஜன் இன்னும் விளையாடாததால் அவர் பெயர் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.