ஆசிரியர் பாடசாலை மாணவன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்!!
கிளிநொச்சியில் பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதில் மாணவனுக்கு கை மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தனது துவிச்சக்கரவண்டியை தொலைத்த குறித்த மாணவன் கடந்தவாரம் மூன்று தினங்கள் பாடசாலைக்கு செல்லவில்லை.
இந்த வாரம் அவர் பாடசாலைக்கு சென்றபோதிலும் கடந்த வாரம் வழங்கப்பட்ட வீட்டுப்பாடத்தையும் செய்யவில்லை.
வீட்டுப் பாடங்களை செய்யாமல் வந்ததற்கு தண்டனையாக ஆசிரியர், பெரிய தடி ஒன்றினால் மாணவனை தாக்கியதாகவும் இதனால் கையில் வீக்கமும் உடம்பில் உட்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவும் மகன் பாதிக்கப்பட்டுள்ளார் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உப அதிபரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன்,
தனது மகன் அந்தப் பாடசாலைக்கு செல்வதனை விரும்பவில்லை.
எனவே,
வேறு பாடசாலை ஒன்றில் மகனை இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.