யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதி்வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இணுவிலைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளை பிரசவித்து கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *